உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாந்த்ரீக பூஜை? 3 பேரிடம் விசாரணை

மாந்த்ரீக பூஜை? 3 பேரிடம் விசாரணை

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகர் உள்ளது. இங்கு கடந்த, 23ம் தேதி நள்ளிரவு அமாவாசை நாளில், அப்பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள், முச்சந்தியில் கோலமிட்டு மனித படம் வரைந்து, சுற்றிலும் விளக்கேற்றி பூஜை செய்துள்ளனர். அப்போது ஒருவர் வந்ததால் ஓடியுள்ளனர். தகவலறிந்து குடியிருப்பு மக்கள் திரண்டனர். மாந்த்ரீக பூஜை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இது தொடர்பாக மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை