வீடு புகுந்து நகை திருடியவர் கைது
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 28; எலக்ட்ரீஷியன். இவர், கடந்த மாதம், 28ல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். மறு நாள் வீட்டிற்கு வந்தபோது, கதவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, ஏழு பவுன் நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், வீட்டில் புகுந்து நகை திருடியது, சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பாரத்குமார், 40, என்பது தெரியவந்தது. அவரை, நேற்று கைது செய்த போலீசார் ஏழு பவுன் நகையை மீட்டனர்.கைது செய்யப்பட்ட பாரத்குமார் மீது நாமக்கல், ஈரோடு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.