உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது

எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது

நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை அருகே, எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பாரஸ்ட் பங்களா ரோடு பகுதியை சேர்ந்தவரசிவக்குமார், 53; இவரது மகன் பிரகதீஸ்வரன், 19; கடந்த, 2023ல் பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், பெரம்பலுாரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில், எம்.பி.பி.எஸ்., சேர்வதற்காக, சிவக்குமார் நேரடியாக சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரது மொபைல் போன் நெம்பரை கொடுத்துவிட்டு வந்துள்ளார். சில நாட்கள் கழித்து, சிவக்குமாரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், 'தன் பெயர் நவநீதம், தஞ்சாவூரை சேர்ந்தவர்; தனியார் கல்லுாரியில் சீட் வேண்டும் என்றால், 20 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதில், 'இரண்டு லட்சம் ரூபாயை, அட்வான்சாக உடனடியாக தர வேண்டும்' எனக்கேட்டுள்ளார். சிவக்குமார் தருவதாக கூறியதும், அவரே நேரடியாக சிவக்குமார் வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி சென்றுவிட்டார்.மீதி பணத்தை தன் கணவரான முருகானந்தத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அதன்படி, சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக, 16 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், அவருடைய மகனுக்கு, எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தரவில்லை. பின், இருவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவக்குமார், நேரடியாக தஞ்சாவூர் சென்று பணம் கேட்டபோது, முருகனாந்தம் மிரட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்து, சிவக்குமார் அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், முருகானந்தத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ