மேலும் செய்திகள்
மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
01-Apr-2025
ப.வேலுார்:-ப.வேலுார், பிலிக்கல்பாளையம் அருகே, காமராஜபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 47; கூலித்தொழிலாளி. வெங்கரை அருகே, கள்ளிப்பாளையத்தை சேர்ந்த சின்னையன் என்பவரது விவசாய தோட்டத்தில், நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வடிவேல் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Apr-2025