உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கானபயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு

மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கானபயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு

மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கானபயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்புநாமக்கல்:'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சிக்கு, இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., - எம்.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.இப்பயிற்சியில் பங்கு பெற, 21 முதல், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு, இரண்டு மாதமும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம், அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ