சக்சஸ் பாயின்ட் ஓவர்சீஸ் எஜூகேஷன் கன்சல்டன்சியில் மெகா லோன் மேளா
நாமக்கல், நாமக்கல் - பரமத்தி சாலையில், சக்சஸ் பாயின்ட் ஓவர்சீஸ் எஜூகேஷன் கன்சல்டன்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம், அமெரிக்கா, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில், உயர்கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் சார்பில், 'மெகா லோன் மேளா' நடந்தது. நிறுவன தலைவர் ராஜதுரை துரைசாமி தலைமை வகித்தார். அதில், 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் வங்கி நிதி நிறுவனத்தினர் பங்கேற்றனர். 100க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.அதில், வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்கு, கல்வி லோன் வழங்கப்படுவது குறித்து விளக்கப்பட்டது. முடிவில், 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி மேலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.