மேலும் செய்திகள்
புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு மக்கள் அச்சம்
21-Aug-2025
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் தெற்கு நல்லியம்பாளையம் சண்முகா நகரை சேர்ந்தவர் சக்திவேல்,42; பைனான்ஸ் அதிபர். கடந்த 9 ல், இவரது வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 35 பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இதேபோல் பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழரசி, 58. இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், இரண்டு பவுன் நகையை திருடிச் சென்றனர். பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ.,சேகர், திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து, திருட்டுப் போன பொருட்களை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து ப.வேலுார் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி., சங்கீதாவிடம் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய, மர்ம நபர்களை கண்டுபிடிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்தார். அ.தி.மு.க., பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், நகரச் செயலாளர் சுகுமார், பொன்னிவேலு உடனிருந்தனர்.
21-Aug-2025