உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம், ஜன. 2-அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை, எலச்சி பாளையம் அருகே, இலுப்புலி பஞ்., மாரப்பம்பாளையம் கிராமத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர் கவிதா தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், மாரப்பம்பாளையம் கிளை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ