மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14-Oct-2025
எலச்சிபாளையம், எலச்சிபாளையத்தில், கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகம் முழுவதும், நுாறு நாள் தொழிலாளர்களுக்கு, இந்தாண்டுக்கான முழுமையான தொகை வழங்க வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் கவிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட செயலாளர் செல்வராணி, சி.பி.எம்., மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், மேற்கு ஒன்றிய தலைவர் கவிதா, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரியா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
14-Oct-2025