உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தரைப்பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

தரைப்பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, மோளகவுண்டம்பாளையம், பூமணி காடு பகுதியில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே, வாகனங்கள் செல்லும் வகையில் கான்கிரீட் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் கான்கிரீட் தரைப்பாலத்தின் தடுப்பு சுவர் ஒன்று சேதமடைந்து, வாய்க்காலுக்குள் சரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள், வாய்க்காலில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் பெரும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மீண்டும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, குமாரபாளையம் நீர் வளத்துறை அதிகாரிகளுக்கும், பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கான்கிரீட் தளத்தை சுற்றிலும் மணல் மூட்டைகள் வைத்து தடுத்துள்ளனர். விபரீதம் நடப்பதற்கு முன், தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அதேபோல், கான்கிரீட் தளத்தின் கீழே ஏற்பட்டுள்ள மண் அரிப்பையும் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி