ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் எஜூகேஷனல் டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன், 2000ல் துவங்கப்பட்ட முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரி தாளாளராக கந்தசாமி, செயலாளராக குணசேகரன், இணை செயலாளராக ராகுல் உள்ளனர். கல்லுாரி முதல்வராக மாதேஸ்வரன் உள்ளார். என்.பி.ஏ., என்.ஏ.ஏ.சி., மற்றும் தன்னாட்சி அங்கீகாரத்துடன் முன்னணி நிறுவனங்களான டி.சி.எஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் அங்கீகாரத்தையும் கல்லுாரி பெற்றுள்ளது.இங்கு இளங்கலையில் பி.இ., சி.எஸ்.இ., ஆர்டிபிஷல் இண்டலிஜென்ஸ் மற்றும் மிஷின் லியர்னிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பி.டெக்., ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி பிரிவு உள்ளது. முதுகலையில் எம்.இ., சி.எஸ்.இ., வி.எல்.எஸ்.ஐ.டிசைன், பவர் சிஸ்டம் இன்ஜினியரிங், சி.ஏ.டி., - சி.ஏ.ம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் உள்ளன. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசெண்ட், டெக்மஹேந்திரா, இன்போசிஸ், வோல்டெக், ரெனால்ட் நிசான் போன்ற, 85க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆண்டுதோறும், இக்கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். 2023--24ம் கல்வி ஆண்டில், 61க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கான வளாகத்தேர்வில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். கல்வி செயல்பாடுகளுக்காக தேசிய அளவிலான சிறந்த பொறியியல் கல்லுாரி விருதை பெற்றுள்ளது. ஆங்கில இதழ்கள் நடத்திய இந்திய அளவிலான சிறந்த தனியார் பொறியியல் கல்லுாரி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு, முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி கவுன்சிலிங் எண்: 2610. இத்தகவலை கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.