மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
நாமக்கல், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் தடகள போட்டி, முத்துகாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. சேந்தமங்கலம் குறுவட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில், முத்துகாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேலும், 19 வயது பிரிவில் பூவரசன், 17 வயது பிரிவில் சந்தோஷ் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர்களை, தலைமையாசிரியர் இளங்கோவன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் ராஜா, பொருளாளர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அருள் ராஜேஷ், எஸ்.எம்.சி., தலைவர் வனிதா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
16-Jul-2025