உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் திருடிய வாலிபர் கைது நான்கு வாகனங்கள் பறிமுதல்

டூவீலர் திருடிய வாலிபர் கைது நான்கு வாகனங்கள் பறிமுதல்

ப.வேலூர்: டூவீலர் திருடிய வாலிபர் ஒருவரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நான்கு டூவீலர்களை பறிமுதல் செய்தனர். ப.வேலூர் பகுதியில், தொடர்ந்து டூவீலர்கள் திருட்டு போனது. இது குறித்து பலரும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, மர்ம நபர்களை பிடிப்பதற்காக எஸ்.பி., பிரவேஸ்குமார் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., தம்பிதுரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பூபால் தலைமையில், எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு, ப.வேலூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'டி.வி.எஸ். எக்ஸல்' மொபட்டில் அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சந்தேகம் அடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (25) என்பதும், ப.வேலூர் பகுதியில் பல்வேறு டூவீலர்களை திருடியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், நான்கு டூவீலர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ