ராசிபுரம்: வட்டார அளவிலான மேல் மூத்தோர் கால்பந்து போட்டியில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. வட்டார அளவிலான மேல் மூத்தோர் கால்பந்து போட்டி, ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், மல்லூர் வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் விளையாடின. அதில், எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், கார்த்திகேயன், சிலம்பரசன், நேதாஜி, முருகேசன் ஆகியோரை, பள்ளித் தலைவர் குமரவேல், துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செல்வராஜன், மேனேஜிங் டிரஸ்டி துரைசாமி, இணைச் செயலாளர் சத்யமூர்த்தி, தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.