மேலும் செய்திகள்
தி.மு.க.,செயற்குழு கூட்டம்
18-Nov-2024
23ல் நாமக்கல் கிழக்கு மாவட்டதி.மு.க., செயற்குழு கூட்டம்நாமக்கல், நவ. 21-'நாமக்கல்லில், வரும், 23ல், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 23 காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்துகொண்டு பேசுகிறார். கூட்டத்தில், வரும், 27ல், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் பற்றியும் விவாதிக்கப் படுகிறது. முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Nov-2024