மேலும் செய்திகள்
நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி
31-Oct-2025
நாமக்கல்: நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவியர், மாநில சிலம்ப போட்-டியில் சாதனை படைத்துள்ளனர்.மாநில அளவிலான சிலம்ப போட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. பல பள்ளி-களை சேர்ந்த மாணவியர் கலந்துகொண்டனர். இதில், குறிஞ்சி பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவி ரோஷிணி, ஒற்றை கம்பு பிரிவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். எட்டாம் வகுப்பு மாணவி மதுாலிகா, ஒற்றை கம்பு பிரிவில், இரண்டாம் இடம் பெற்று, வெள்ளி பதக்கம் வென்றார்.தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற இருவரும் தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவியரை, பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
31-Oct-2025