உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை

நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை

நாமக்கல்: நவராத்திரி திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்படும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. பல்வேறு வண்ணங்களில், அழகிய வடிவுடன் கூடிய கொலு பொம்மைகள், 20 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொம்மைகளை, மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.நவராத்திரி திருவிழா, மக்களிடத்தில் ஒற்றுமை, குடும்பத்தில் சுபிட்ஷம் ஏற்படுதல் போன்ற சுப காரியங்கள் நிகழ்வதற்காக கொண்டாப்படுகிறது. விழாவையொட்டி, வீடுகளை சுத்தம் செய்து கொலு பொம்மைகள் வைப்பதற்காக படிக்கட்டு அமைக்கப்படும். முதல் படிக்கட்டில் கலசம் மற்றும் ஸ்வாமி சிலைகள் வைத்து பூஜிக்கப்படும்.அடுத்தடுத்த படிகளில், தேசத் தலைவர்கள் பொம்மை, விலங்கு, பறவை பொம்மை உள்ளிட்டவை வைக்கப்படும். ஒன்பது தினங்கள் நடக்கும் பூஜையில், முதல் மூன்று தினங்கள் லட்சுமி பூஜை, அடுத்த மூன்று தினங்கள் துர்கை, கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி பூஜைகள் நடத்தப்படும்.ஒன்பது நாட்கள்தோறும், ஸ்வாமிக்கு பாசிப்பயிறு, அவரை, துவரை, சுண்டல் உள்ளட்ட தானிய வகைகள் படைக்கப்படும். பின், பூஜையில் பங்கேற்போருக்கு அவை வழங்கப்படும். சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வழங்குவது வழக்கம். இந்தாண்டுக்கான நவராத்திரி விழா, வரும் 27ம் தேதி துவங்க உள்ளது.அதையொட்டி, தற்போது நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கொலு பொம்மை, அதன் சைஸ், வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 20 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை கொலு பொம்மை தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.இதுகுறித்து நாமக்கல் நரசிம்மர் சன்னதி தெருவைச் சேர்ந்த ருக்குமணி தெரிவித்ததாவது:நவராத்திரி விழா, அமாவாசை தினத்தன்று துவங்க உள்ளது. குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நிகழ்வதற்கு நவராத்திரி பூஜை செய்யப்படுகிறது. நவராத்திரி பூஜை செய்வோர், குறைந்தபட்சம் மூன்று படிகள் அமைக்க வேண்டும்.விழாவின் முதல் நாள் முதல், காலை, மாலை வேளையில் பூஜை நடத்தப்படும். முதல் மூன்று தினங்கள் லட்சுமி ஸ்லோகம் சொல்லி பூஜை நடத்தப்படும். அப்போது ஸ்வாமிக்கு படைக்கப்பட்ட நெய்வேத்தியங்களான சுண்டல் உள்ளிட்டவற்றை பூஜையில் பங்கேற்போருக்கு வழங்கப்படும். வெற்றிலை, பாக்கு சேர்த்து சுமங்கலி பெண்களுக்கு வழங்க வேண்டும்.அடுத்த மூன்று தினங்கள் துர்கை ஸ்லோகங்கள் சொல்லியும், பாட்டுப் பாடியும் பூஜை நடத்தப்படும். கடைசி மூன்று தினங்கள், சரஸ்வதி பூஜையும் நடத்தப்படும். பூஜை முடிவில், குழந்தைகளுக்கு சுண்டல், பேனா, நோட்டுப், புத்தகம் போன்ற அவரவர் வசதிக்கேற்ப வழங்கலாம்.பூஜையின் போது, சிறுவர்களுக்கு கண்ணன், ராமன், சீதை உள்ளிட்ட வேடம் அணிந்து பாட்டுப்பாடி மகிழ்விக்கப்படுவர். தற்போது, விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள் மதுரை, காஞ்சிபுரம், காரைக்குடி, கடலூர், புதுச்சேரி போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.பொம்மைகளின் சைஸ், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை இருக்கும். அதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரங்கமனார் ஸ்வாமி கொலு, 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் கொலு பொம்மையை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். வரும் நாட்களில் கொலு பொம்மை விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ