உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்து தடுப்பு நடவடிக்கைதுணை சபாநாயகர் ஆய்வு

விபத்து தடுப்பு நடவடிக்கைதுணை சபாநாயகர் ஆய்வு

ராசிபுரம்:ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில், விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து துணை சபாநாயகர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அதுகுறித்து துணை சபாநாயகர் தனபால், கலெக்டர் குமரகுருபரன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சேலம் திட்ட இயக்குனர் பொன்னைய்யா ஆகியோர், சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது, விபத்து நடக்கும் பகுதியில் தடுப்பு சாலை அமைப்பது, சாலையை அகலபடுத்துதல், பஸ் ஸ்டாப் அமைத்தல், இரவு நேரங்களில் ஹைமாஸ் விளக்கு வசதி ஏற்படுத்துதல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ