உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் செல்வம் கல்லூரியில்முப்பெரும் விழா கோலாகலம்

நாமக்கல் செல்வம் கல்லூரியில்முப்பெரும் விழா கோலாகலம்

நாமக்கல்: நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில், முத்தமிழ் மன்றம் துவக்க விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் செல்வம் கலைத்திருவிழா என முப்பெரும் விழா நடந்தது.கல்வி நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் ஜெயம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தமிழ்மன்றத் தலைவர் சத்யநாதன் வரவேற்றார். கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருள்சாமி வாழ்த்தி பேசினார்.திருச்சி ஈ.வே.ரா. கல்லூரி பேராசிரியர் காசிமாரியப்பன் பங்கேற்று, 'பண்பாட்டு அசைவுகள்' என்ற தலைப்பில் பேசுகையில்''ஆங்கிலம் மோகம், வடமொழித் தாக்கம் ஆகியவற்றால் நம் தமிழ்மொழி சிதையுறுவதையும், தமிழ் சார்ந்த பெயர்களின் சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிளது. மேலும், திரைப்படங்கள் நம் பண்பாட்டு சீரழிவதற்கு துணை போகிறது,'' என்றார்.ஆசிரியர் தினவிழாவில், கல்லூரியின் மனநல ஆலோசகர் பேர்ல்கிட்டு, ஆசிரியர்களின் பணி, கடமை குறித்து விளக்கினார். பின்னர் நடந்த கலைத்திருவிழாவில், மாணவ, மாணவியரிடையே நாட்டுப்புறப்பாடல்களுக்கான நடனம், நாடகம், பலகுரல் உள்ளிட்ட பல்வேறு மேடை போட்டிகளும், கோலம், கூந்தல் அலங்காரம், பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர்கள் ராஜவேல், கவிதா, முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை