| ADDED : செப் 19, 2011 12:55 AM
ராசிபுரம்: ராசிபுரம், ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி தகவல்
தொழில்நுட்பத்துறை சார்பில், 'ஆண்ட்ராய்டு' என்ற தலைப்பில், இரண்டு நாள்
பயிற்சி முகாம் நடந்தது.கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்பத்துறை
தலைவர் உமா மகேஸ்வரி வரவேற்றார். முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன்,
நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர்
மாலாலீனா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.சாண்டில்யா மென்பொருள்
தொழில் துறை நிறுவன அதிகாரி பரிவேஸ் குப்தா, ராக்கேஷ் ஜா ஆகியோர் பங்கேற்று
பேசும்போது, 'கருத்துப்பட்டறை, மாணவ, மாணவியருக்கு ஒரு சிறந்த பயிற்சியாக
அமையும். தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும்.புதிய கருத்துக்களுக்கு
எளிய வடிவம் கிடைக்கும். சுய பங்களிப்பை மேம்படுத்தி கொள்ள உதவும். சிறந்த
முறையில் தங்களை வரையறுத்து, அந்த முறையில் தங்களை முன்னேற்ற வேண்டும்.
பயிற்சி முகாமின் மூலம், தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்'
என்றனர்.நிகழ்ச்சியில், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பாஸ்கரன்,
இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், முதுநிலை இன்ஜினியரிங் துறை
இயக்குனர் விஷ்ணு மற்றும் முதுகலை கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் துறை தலைவர்
பிரபாகரன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர்
பங்கேற்றனர்.