உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன்கடைஉஞ்சனை பஞ்., தலைவர் முதல்வருக்கு மனு

சாலப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன்கடைஉஞ்சனை பஞ்., தலைவர் முதல்வருக்கு மனு

நாமக்கல்: 'மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, உலகப்பம்பாளையம், சாலப்பாளையம், குட்டிக்காபாளையம் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உஞ்சனை பஞ்சாயத்து தலைவர் தாமரைச்செல்வி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட உஞ்சனை பஞ்சாயத்து சாலைப்பாளையத்தில், 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை, இரண்டு கி.மீ., தூரத்தில் போக்கம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வாங்கி வரும் நிலை உள்ளது.அதனால், மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், குட்டிக்காபாளையத்தில், 220 ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களும், இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள உஞ்சனை சென்று ரேஷன் கடையில் குடிமை பொருட்களை வாங்கி வரும் அவலநிலை நீடித்து வருகிறது.மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, உலகப்பம்பாளையம், சாலப்பாளையம் மற்றும் குட்டிக்காபாளையம் ஆகிய கிராமங்களில், பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை