உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

அரசு பள்ளியில் ஆண்டு விழாமல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 21ம்ஆண்டு பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியை சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியர் ரவி வரவேற்றார். மாணவர்களின் ஆடல், பாடல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.வீட்டின் பூட்டை உடைத்துநகை திருடிய 2 பேர் கைதுஎருமப்பட்டி: பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்து பவுன் நகை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 55. இவர் கடந்த மாதம் மகனின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக, உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்தை சேர்ந்த ராஜ்குமார், 31, சேலம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 34, ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை