உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டிஅரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்குமாரபாளையம், நவ. 1-குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள்,துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். என்.சி.சி. மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15வது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ, நிர்வாக அலுவலர் கோபால் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த, 360 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த இந்த முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில், 8 மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றனர். மாணவர் பரத், 3 செ.மீ., அளவிற்குள் குண்டுகளை பதித்து மிகச் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, ஈரோடு 15 வது தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தார் விஜயகுமார் உள்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி