உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இன்று திறப்பு

புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இன்று திறப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் சீராக செல்லவும், கடந்த, 2021ல், ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிப்பாளையம் பிரிவு சாலை வழியாக ஒன்பதாம்படி பகுதி வரை, 3- கி.மீ., துாரத்திற்கு, 200- கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் முழுவதும் முடிவடைந்து உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.கடந்த, 8ல் மேம்பாலம் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பாலம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர், இன்று தலைமை செயலகத்தில் இருந்து, காணொலியில் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர், கலெக்டர், எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி