உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி

வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி

குமாரபாளையம்: ஒடிசா மாநிலம், சோனப்பூர் மாவட்டம், பசோணி பகுதியை சேர்ந்தவர் ஜுபராஜ் ஹரிபால், 42; இவரை, அதே ஊரை சேர்ந்த திலிப் தாண்டியா, 26, என்பவர், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் உள்ள மில்லில் பணியாற்ற, நேற்று முன்தினம் அழைத்து வந்தார். நேற்று காலை, வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். அப்போது, ஜுபராஜ் ஹரிபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து மில் மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்த-போது ஜுபராஜ் ஹரிபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது-குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை