என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் துவக்கம்
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 55 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் இன்று துவங்கியது. அதன் தொடக்க விழா, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) புருசோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.பிளஸ் 1 மாணவியர், 25 பேர் பங்கேற்கும் இப்பள்ளிக்கான என்.எஸ்.எஸ்., முகாம், நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அக்., 2 வரை நடக்கிறது. பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேளாண்மை குழுவினர், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.