மேலும் செய்திகள்
மலை மாவட்டத்தில் ஓணம் திருவிழா கோலாகலம்
05-Sep-2025
நாமக்கல் :நாமக்கல் -டிரினிடி மகளிர் கல்லுாரியில், ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின், 'டிரினிடி மகளிர் மன்றம்' சார்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் தலைமை வகித்து, ஓணம் பண்டிகையின் சிறப்புகளை விளக்கினார்.முதல்வர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். பண்டிகையையொட்டி, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கேரள பாரம்பரிய வெண்பட்டு சேலையில் வருகை புரிந்தனர். மாணவியர் ஓணம் திருவிழா நடனமாடி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.மேலும், கல்லுாரி வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவியர் அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். நிர்வாக அலுவலர் செந்தில்குமார், துறை தலைவர்கள், மாணவர் பேரவை தலைவர் பிரதிக்ஷா, செயலாளர் ஹெவியா, பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2025