டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி
பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, படவீடு பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார், 32; லாரி அபீசில் மேலாளர். இவர், நேற்று அப்-பகுதி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏதிரே வந்த கார் மோதியதில், குமார் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு, நேற்று இரவு குமார் உயிரிழந்தார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.