மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
16-Dec-2025
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 2026ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்.பி., விமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பது; காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் வதை செய்வதை தவிர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.மேலும், ஜல்லிக்கட்டு விழாவிற்கான அலுவலர்கள் குழு அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பார்வையாளர் அரங்குகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விழாக்குழுவினருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.இதுகுறித்து கலெக்டர் பேசுகையில், ''மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் அரசின் இணையதளத்தில் அனைத்து விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ஜல்லிக்கட்டு நடக்காத கிராமங்களில் புதிதாக நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது. போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகளையும் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 2026ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த இதுவரை, 5 விண்ணப்பங்கள் வந்துள்ளன,'' என்றார்.கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விழாக்குழுவினர் கலந்துகொண்டனர்.
16-Dec-2025