உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

திருச்செங்கோடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில், 31.12 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மலைக்கோவிலின் முக்கிய திருவிழாவான, வைகாசி விசாக தேரோட்ட விழா, கடந்த, 1ல் தொடங்கி, 14ல் கோலாகலமாக முடிந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சாமிநாதன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் ரமணிகாந்தன் ஆகியோர் முன்னிலையில், நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 31 லட்சத்து, 12,372 ரூபாய் ரொக்கம், தங்கம், 142 கிராம், வெள்ளி, 301 கிராம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ