மேலும் செய்திகள்
பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம்
10-May-2025
நாமக்கல்: நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் வைகாசி திருத்தேர் விழா கோலாகலமாக துவங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருத்தேர்விழா வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி, நேற்று சக்தி அழைப்பு, காப்பு கட்டு நடந்தது. அதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பகத்தர்கள் மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.இன்று காலை, பூச்சாட்டு விழா நடக்கிறது. 18ல் மறுகாப்பும், 25ல் வடிசோறு மற்றும் மாவிளக்கும், 26ல் அபிஷேகம், ஆராதனை, அம்மன் அலங்காரம், ரத உற்சவம், அலகு குத்து, பூவோடு எடுத்தல், அன்று இரவு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.மே, 27ல் மாவிளக்கு, பொங்கல், வசந்தோற்சவம், 28ல் மஞ்சள் உற்சவம், 29ல் கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் வினோதனி, கோவில் பணியாளர்கள், பூசாரிகள், அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
10-May-2025