உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., மாயமானதால் பரபரப்பு

பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., மாயமானதால் பரபரப்பு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பி.டி.ஓ.,வாக பணிபுரியும் கணவர் மாயமானதாக, அவரது மனைவி அளித்த புகாரின்படி, போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக, நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரன், 54, பணிபுரிகிறார். கடந்த ஏப்ரலில் பணியிட மாறுதல் பெற்று, பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். இவருக்கு யசோதா, 44, என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். பிரபாகரன், நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வந்தார் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று காலை, யசோதா பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் மூன்று தனிப்படை அமைத்து மாயமான பிரபாகரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை