உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி

கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி

ராசிபுரம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கியமாக அருகில் உள்ள சிறிய கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் அதிகளவு சென்று வருகின்றன. '4பி' அரசு பஸ், ராசிபுரத்தில் இருந்து பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை வழியாக சென்று மீண்டும் ராசிபுரத்திற்கு வருகிறது. பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் வலது பக்கம் பின்பக்க டயர் கிழிந்து மற்றும் வெடிக்கும் நிலையில் இருந்தது. இதை பார்த்த பயணிகள், பீதியுடன் பயணித்தனர். டயர் வெடித்து விபத்து ஏற்படும் முன் புதிய டயரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை