உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரி சாலையில் தடுப்புவேலி அமைக்க மக்கள் கோரிக்கை

ஏரி சாலையில் தடுப்புவேலி அமைக்க மக்கள் கோரிக்கை

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, சூரியகவுண்டம்பாளையம் டி.சி.எம்.எஸ்., பின்புறம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியையொட்டி, ராமாபுரத்திற்கு தினமும் இரவு, பகல் பாராமல் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலையில் இதுவரை தடுப்பு வேலி அமைக்கவில்லை. சாலையின் இருபுறமும் பள்ளம் உள்ளது. குறிப்பாக, இரவில் இப்பகுதியில் கும்மிருட்டாக காணப்படும். அப்போது, சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, ஏரி சாலையின் இருபுறமும், தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !