உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கத்தரி வெயில் முடியும் நாளில் கனமழை வெள்ளத்தால் மக்கள் அவதி

கத்தரி வெயில் முடியும் நாளில் கனமழை வெள்ளத்தால் மக்கள் அவதி

நாமக்கல், 'கத்தரி' வெயில் முடியும் நாளான, நேற்று நாமக்கல்லில் கனமழை பெய்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.கடந்த, 4ல், 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்தரி வெயில் துவங்கியது. கத்தரி வெயில் காலத்தில் மழை பெய்வது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புபடி, கத்தரி வெயில் துவங்கிய நாளில், மாவட்டம் முழுவதும், ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.கத்தரி வெயில் நேற்றுடன் முடிந்தது. ஆனால், பலத்த காற்றுடன், நேற்று மாலை, 4:30 மணிக்கு, நாமக்கல் நகரில் கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால், தாழ்வான பகுதியில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பரமத்தி சாலை, சேலம் சாலை பகுதிகளில், மழைநீர் தேங்கி நின்றது. அதனால், வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை