மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 10 பேருக்கு நலத்திட்டம்
19-Nov-2024
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்ரூ.9.37 லட்சத்தில் நலத்திட்டம்நாமக்கல், நவ. 26-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 579 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.கூட்டுறவுத்துறை சார்பில், 4 பேருக்கு, 4.14 லட்சம் ரூபாய் மதிப்பில் வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு கடன், தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், ஒருவருக்கு, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையாக, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, துறை சார்பில், காவக்காரன்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சோலைமுத்து கோரிக்கை ஏற்று, 5,560 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், மடக்கு குச்சி, காதொலி கருவி, இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு உதவித்தொகை என, மொத்தம், 9 பேருக்கு, 9.37 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
19-Nov-2024