உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விழா

பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விழா

நாமக்கல்: ராசிபுரம் அருகே, பாச்சலில் பாவை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, வேலைவாய்ப்பு தின விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். பெங்களூரு ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி நிறுவன இயக்குனர் ஜெயராமன் ஞானவடிவேல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''கல்லுாரி கல்வி முடித்து, தொழில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களாகிய நீங்கள், பணிபுரியும் நிறுவனத்தின் தயாரிப்பு, வாடிக்கையாளர், நோக்கம், புரிந்துணர்வு கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். தாளாளர் மங்கை நடராஜன் வாழ்த்தி பேசினார். முன்னதாக, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், சிறப்பு விருந்தினருக்கு நினைவுபரிசு வழங்கினார். அதை தொடர்ந்து, டெக் மஹேந்திரா, இன்போசிஸ், ஹெச்.சி.எல்., விப்ரோ, சி.டி.எஸ்., டி.சி.எஸ்., உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற, 3,244 மாணவர்களுக்கு பணிஆணை வழங்கினார்.விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, வேலைவாய்ப்பு மைய அலுவலர் தாமரை செல்வன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மோகன், அனைத்து கல்லுாரி முதல்வர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை