தொட்டிப்பட்டி பஞ்.,ல் 2,000 பனை விதை நடவு
நாமக்கல், நாமக்கல் யூனியன், தொட்டிப்பட்டி பஞ்.,ல், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவ தொண்டர்கள், தொட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ தொண்டர்கள் இணைந்து, நாமக்கல் தொட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கர செல்லியூர், மணியாரம்புதுார், தொட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிக்கரை, நீர்நிலை ஓரம், பனை விதை நடவு செய்யும் பணி நேற்று நடந்தது.எம்.பி., மாதேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர், பனை விதை நடவு பணியை தொடங்கி வைத்தனர். வி.ஏ.ஓ., ரேவதி வழிகாட்டுதல்படி, 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.நாமக்கல் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் ராமு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம், பள்ளித்துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தொட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாவையரசி, உதவி திட்ட அலுவலர் சுமதி, ஆசிரியர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.கொல்லிமலை அடிவாரத்தில்மதுவிலக்கு போலீசார் சோதனைசேந்தமங்கலம், அக். 26கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சேந்தமங்கலம் அடுத்துள்ள மலை வாசஸ்தலமான கொல்லிமலை, தமிழகத்தின் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கொல்லிமலைக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக, நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் ஏதேனும் வாகனங்களில் கடத்தப்படுகிறதா? என, கிடுக்கிப்பிடி சோதனை நடத்தினர்.