நிதி நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
ராசிபுரம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் முன், செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து ராசிபுரம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராசிபுரம் டி.எஸ்.பி., விஜய-குமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார்.அப்போது, மாநிலங்களில் இயங்கி வரும் வங்கிகள், நிதி நிறு-வனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், ஏ.டி.எம்., மையங்களில் தொடர் குற்றச்சம்பவங்கள் நடந்து வரு-கின்றன. அதனால், ராசிபுரம் பகுதியில் இயங்கி வரும் வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு தக்க பாது-காவலர்களை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்ப செல்லும்போது, தக்க பாதுகாப்புடன் பணம் எடுத்து செல்ல வேண்டும் என, அறிவுறுத்தினர். வங்கி அதிகாரிகள், நிதி நிறு-வன அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.