உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாவை பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா கோலாகலம்

பாவை பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா கோலாகலம்

ராசிபுரம், :ராசிபுரம் பாவை பொறியியல் கல்லுாரியில், வேளாண் பொறியியல் துறையின் வேளாண் மன்றம் மற்றும் பாவை பாலிடெக்னிக் கல்லுாரியின் வேளாண் பொறியியல் துறை சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''வேளாண் பொறியியல் மாணவர்களாகிய நீங்கள், ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும், புது புது யுக்திகளையும் வேளாண் தொழிலில் உருவாக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறை மாணவியர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின், சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராமசாமி, பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார், உடற்கல்வி இயக்குனர் சந்தானராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !