மேலும் செய்திகள்
செல்லிஅம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
02-Oct-2025
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 15ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சுவாமி ஊர்வலம் நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய பண்டிகையான பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஊர் மக்கள் ஆட்டமாடி, அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.வண்டி வேடிக்கையில் யானை, ஒட்டக வாகனம், மாட்டு வண்டி, லோடு ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக அழைத்து வரப்பட்டன. இதில், யானை வாகனத்தில் ராஜா ராணி வேடமணிந்தவர்கள், பொதுமக்களுக்கு மலர் துாவி ஆசி வழங்கினர். பிற வாகனங்களில் முருகன், கணபதி, சரஸ்வதி, லட்சுமி சுவாமி வேடமணிந்த பக்தர்கள் காட்சியளித்தனர். ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
02-Oct-2025