உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நைனாமலை கோவிலுக்கு தார்ச்சாலை அமைக்க பூஜை

நைனாமலை கோவிலுக்கு தார்ச்சாலை அமைக்க பூஜை

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த நைனாமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலை மீதுள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல, 3,700 படிகள் ஏறி செல்ல வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், படி ஏறி சுவாமி தரிசனம் செய்வது முடியாத காரியமாக இருந்தது. இதனால், மலைப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, 10 ஆண்டுகளுக்கு முன் மலைப்பாதை அமைக்கும் பணி துவங்கி, 7 கி.மீ., தொலைவுக்கு மண் பாதை அமைக்கப்பட்டது. மண் பாதையில் தார்ச்சாலை அமைக்க, கடந்த, 20ல் பூமி பூஜை நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.எல்.ஏ., ராமலிங்கம், கோவில் நிர்வாக அதிகாரி கீர்த்தனா ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ