உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் பழுது பார்ப்போர் சங்க மாணவர்களுக்கு பரிசு

டூவீலர் பழுது பார்ப்போர் சங்க மாணவர்களுக்கு பரிசு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தலைமை சங்கம் சார்பில் நடந்த, உலக பைப் டெக்னீசியன் தின முதலாமாண்டு விழா மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் நவலடி சேகர், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாகன பழுது பார்ப்போர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். மே, 28ஐ உலக பைக் டெக்னீசியன் தினமாக தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி