உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு

500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு

ராசிபுரம்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களிடம் திருக்குறளை கொண்டுபோய் சேர்க்க மன்றங்கள் துவங்கப்படுகிறது. இதில், மாணவர்கள் திருக்குறள் மனப்பாடம் செய்ய பல்வேறு பயிற்சியளிக்கப்படுகிறது.ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள அரசு பள்ளியில் இதற்கான மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பள்ளி கல்லுாரி மாணவர்களிடத்தில் கொண்டுசெல்ல மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கப்படும். 30 வாரங்கள் நிறைவில், 500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ, மாணவியருக்கு, 10,000 ரூபாய், 500 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றார்.கருத்தாளர்களாக தட்சிணாமூர்த்தி, மனோஜ்குமார், தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை தலைமை ஆசிரியர் பாரதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !