உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாபகரமான இயற்கை விவசாயம் ராசிபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

லாபகரமான இயற்கை விவசாயம் ராசிபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரத்தில், வீ த லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், 'லாபகரமான இயற்கை விவசாயம்' என்ற தலைப்பில் பயிற்சி மற்றும் விவசாயி-களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், இயற்கை நுண்ணுயிர் குறித்து வெங்கிடுசாமி விளக்கி பேசினார். மேலும், இயற்கை நுண்ணுயிர் உபயோகிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அவருடைய சொந்த அனுபவங்களையும், அவரிடம் ஆலோசனை பெற்று பயனடைந்த பல விவசாயிகளின் அனுப-வங்களையும் பகிர்ந்து கொண்டார். 'நம்மாழ்வார்' விருது பேற்ற லோகநாதன், இயற்கை விவசாயத்திற்கு மாறிய அனுபவங்க-ளையும், மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துகளை குறைந்த செலவில் தயாரித்து அதிக மகசூல் பெற்று நல்ல வருமானம் ஈட்-டுவதையும் விரிவாக எடுத்துரைத்தார்.மீன் அமிலம் மற்றும் பல்வேறு தலைகளை கொண்டு தயாரிக்கும் வகைகளையும் விளக்கினார். 25 விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டனர். சாணப்பாசி கரைசல் செயல்முறை பயிற்சி அளிக்கும்படி கேட்டுக்-கொண்டனர். வனவிலங்குகள் குறிப்பாக மான்கள் வாழை மற்றும் பிற பயிரை சேதப்படுத்துவதால் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அதற்கு தீர்வு வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், மத்திய அரசின் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பற்றிய தனியாக நிகழ்ச்சி நடத்த வேண்டுகோள் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை