கனரக வாகனம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம், குமாரபாளையம், சின்னப்ப நாயக்கன்பாளையம் உழவர் சந்தை அருகே, பா.ஜ., சார்பில் கனரக வாகனங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:குமாரபாளையம் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில், நடுவில் புகுந்து சந்தைப்பேட்டை, தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், காவல் நிலையம், சினிமா தியேட்டர், பொது வங்கிகள் உள்ளிட்ட மக்கள் நெருக்கமான பகுதிகளில் செல்வதால் பெரிய அளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு அச்சமூட்டும் வகையில், ஊருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தடை விதிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கனரக வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் விரைவில் நடத்துவது என, உறுதி ஏற்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் கூட, இந்த கனரக வாகனங்களால் உரிய நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.