உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளிக்கு நிலையான விலை நிர்ணயம் கோரி ஆர்ப்பாட்டம்

மரவள்ளிக்கு நிலையான விலை நிர்ணயம் கோரி ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக்-குழு சார்பில், பொன்னேரி கைக்காட்டி பஸ் ஸ்டாப் அருகே மர-வள்ளி கிழங்கிற்கு, 15,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிவசந்திரன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், மரவள்ளி கிழங்கிற்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி மூட்டைக்கு, 4,500 ரூபாய் முதல் குறைந்தபட்சம், 3,500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மரவள்ளி கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ