மேலும் செய்திகள்
கரூரில் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
05-Feb-2025
குமாரபாளையம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஹிந்து முன்னணி சார் பில் நடக்க இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய தமிழக அரசை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில், 144 தடை உத்தரவை கண்டித்தும், குமாரபாளையம் - பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். இதில், தமிழக அரசுக்கு எதிராகவும், திருப்பரங்குன்றம் மலைக்கோவிலை யாருக்கும் விட மாட்டோம் என்றும் கண்டன கோஷம் எழுப்பினர். பங்கேற்ற, 14 பேரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.* பள்ளிப்பாளையம் ஒன்றியம், நகர பா.ஜ., சார்பில், நகர தலைவர் லோகேஸ்வரன் தலைமையில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று இரவு, 7:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய தலைவர் சம்பத், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் நீதி வடிவேல், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார் உள்பட, 37 பேர் கலந்துகொண்டனர். அவர்களை, பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
05-Feb-2025