குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பி.டி.ஓ., ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு, பாலக்கோடு அடுத்த எர்ரனஹள்ளி பஞ்., உட்பட்ட ரெட்டியூர் கிராம பெண்கள், 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன், பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: நாள்தோறும், ஒரு கி.மீ., வரை தண்ணீர் எடுக்க செல்லும் நிலை உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் பதித்த குழாய்கள் காட்சி பொருளாகவே உள்ளது. குடிநீர் வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.