உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், டிச. 20 குமாரபாளையம் - இடைப்பாடி செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. 80 அடி அகலத்தில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைத்து வருகின்றனர். தற்பொழுது தார் சாலை மோசமடைந்துள்ளதால் மீண்டும் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக சாலை அமைக்க வேண்டும் என பொதுநல கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலை துறைக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி சாலை புதுப்பிக்கும் பணியை துவக்கினர். இதை கண்டித்து அனைத்து பொதுநல கூட்டமைப்பினர் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். போலீசார்,போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இரு நாளில் அமைதிக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்; ஆக்கிரமிப்பு அகற்றிய பின் சாலை புதுப்பிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைத்து பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை